கண் வலி நீங்க வீட்டு வைத்தியம்

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை, கண்ணே, மணியே என கொஞ்சுவார்கள். காரணம் கண்ணின் மணியைப் போல காத்து வளர்ப்பதால் தான். இந்த உலகிற்கு வெளிவந்த உடனேயே அதை நமக்கு காட்டுவதும் கண் தான். அப்படிப்பட்ட கண் இல்லை என்றால் இருள் சூழும். இவ்வுலகம் நமக்குத் தெரியாது. அதனால்தான் உடலில் கண் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த உருப்பாக கருத்தப்படுகிறது.

அப்படிப்பட்ட கண்ணை நாம் பாதுகாப்பு அதி முக்கியமானது. இன்றைய இயந்திர உலகில் கண்களை குறித்து கவலையில்லாமல் 24 மணி நேரமும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கணினி முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். கண்களுக்கு பாதிப்பு அளிக்க கூடிய திறன் பேசிகளை எந்நேரமும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவ்வாறு பயன்படுத்துவதால் கண்கள் மிக பாதிப்படைகின்றன.

சிலருக்கு சத்துக் கோளாறு, வெப்ப மிகுதி, சுற்றுச்சுழல் போன்ற காரணிகளாலும் கண்கள்  பாதிப்பு அடைகின்றன. இதனால் கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டு மிக அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கண் நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது. கண் வலி வந்தால் இயற்கையிலேயே சரிசெய்ய நம்மிடம் வீட்டு வைத்தியம் நிறைய உள்ளது. முறையாக அவற்றை பாவித்தால் கண் வலியிலிருந்து விடுதலை பெறலாம்.

கண்வலி நீங்க வீட்டு வைத்தியக் குறிப்புகள் 

கண்கள் கிருமித் தொற்றால் சிவந்திருந்தால் , அதைப் போக்க வெநநீரில் உப்பு அல்லது மஞ்சளிட்டு, அதை பஞ்சில் தொட்டு, பாதிக்கப்பட்ட கண்கள் மீது துடைத்தெடுக்க, கிருமிகள் அழியும். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட கண்களிலிருக்கும் கிருமிகள் அழியும். கண் சிவந்திருப்பது குறையும்.

home remedy for eye pain


கண்கட்டி நீங்க வீட்டு வைத்தியம் 


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கண் கட்டி வந்து ஒரு வழி செய்துவிடும். முதல் நாளில் லேசாக வீங்கத் தொடங்கி, மறுநாள் அடுத்த நாள் கண் மேல் அல்லது கீழ்புருவ விளிம்பில் சிவந்த கட்டியாக வந்து இம்சை கொடுக்கும். இதை சரி செய்ய 10 மில்லி பன்னீரை எடுத்து அதில் 10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் படிகார் சேர்த்து ஒரு நைட் (இரவு) முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு கண்களை கழுவி வர வேண்டும். இவ்வாறு ஓரீரு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் "கண்கட்டி" வந்த சுவடு இல்லாமல் மறைந்துவிடும். வலியும் குறையும்.

கண் வலி நீங்க புளியம்பூ


சிலருகு அடிக்கடி கண் வலி கண்டு அவதியைக் கொடுக்கும். அவ்வாறானவர்கள் அருகில் உள்ள புளிய மரத்திலிருந்து பூவை ஒரு கைப்பிடி அளவிற்கு சேகரித்து வரவும். அதை நீர் விட்டு , தூய்மைப்படுத்தப்பட்ட அம்மி அல்லது மிக்சியில் நன்றாக பசை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு அந்த பசையை கண் வலி இருக்கும் பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால் கண்வலி குறையும். கண் சிவப்பும் குறைந்து போகும்.

கண்களில் நீர் வடிதல் பிரச்னை தீர


சிலருக்கு இன்ன காரணமென்றே தெரியாத வகையில் கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கும். அதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் வெள்ளம், மிளகு, இஞ்சி, வேளைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து, அதில் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதை அதிகாலை நேரத்தில் 15 கிராம் அளவிற்கு எடுத்து சாப்பிட கண்களில் நீர் வடிதல் குறைந்து, வெகு விரைவில் குணமாகும்.

கண்வலி நீங்க சீரகம்


கண்களில் வலி குறை சீரகம் பெரும் பங்காற்றுகிறது. தண்ணீரில் சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதை எடுத்து மிதமான சூடு ஆகும் வரை ஆற வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் கண்களை கழுவி வர கண் சிவப்பு குறையும். அதே நேரத்தில் கண்களில் வந்த வலி மிக மிக வேக மாக குறைந்து, கடைசியில் வலியில்லாமல் போகும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இப்படி செய்துவர கண் வலி வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பொறுப்பாகாமை: இந்தக் குறிப்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவர் அல்லது வீட்டு வைத்தியத்தில் கைத்தேர்ந்த முதியோர்களிடம் அல்லது அருகில் மருத்துவரை அணுகி என்ன பிரச்னை என தெரிந்துகொண்டு இதைச் செய்ய முற்படவும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்பிற்கு நலம்டாக்டர் வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


Post a Comment

0 Comments