சொத்தைப் பல் சரி செய்வது எப்படி?

 சொத்தைப் பல் சரியாக இயற்கையில் சில வைத்தியமுறைகள் உண்டு. சொத்தைப்பல் என்பது, பற்களின் மேற்குழியில் கரிய நிற குழி ஏற்பட்டு மெது மெதுவாக பல்லை துளைத்து, பற்களின் வேர்களையும், அது இருக்கும் திசுக்களையும் கொல்லும் கிருமிகளால் ஏற்படும் ஒருவித பல் நோய் ஆகும். 

எப்படி சொத்தைப் பல் ஏற்படுகிறது? 


1. சூடான உணவுகளை உட்கொள்வதால் 

2. சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு பண்டைகளை அதிகம் சாப்பிடுவதால்

3. பற்களை சரிவர துலக்காமல், உணவுத் துகள்கள் பற்களின் இடையில் தங்கி, தொற்று ஏற்படுவதால்

4. குறிப்பாக வாய்சுத்தம் மேற்கொள்ளாதவர்கள், அடிக்கடி புகையிலை, பான்பராக் போன்ற துர்நாற்றம் கொடுக்க கூடிய பொருட்களை பயன்படுத்துபவர்கள் அதிகமான பல் நோய்கள் ஏற்படுகின்றன. 


சொத்தைப் பல்லால் ஏற்படும் வினைகள்: 


சொத்தைப் பல் வந்தவுடன் பற்களை கருமை நிறமாக காட்சி அளிக்கும். கிருமிகள் அதிகரித்து, பற் குழியில் பூச்சிகள், புழுக்கள் உருவாகும். அதனால் கடைவாய் வீக்கமடைந்து, தாங்க முடியாத வலி ஏற்படும். அதன் பிறகு மருத்துவரை நாடி, அவர் பற்களை சுத்தம் செய்து, பற்குழியில் மறைந்து வாழும் பூச்சிகளை எடுப்பார். 

பல் சொத்தையாகி மிகவும் சேதமடைந்திருந்தால், அதை நவீன முறையில் மருந்து செலுத்தி, வலி தெரியாமல் மருத்துவர் தனியாக பற்களை எடுத்து விடுவார். தேவைப்பட்டால், அந்த இடத்தில் செயற்கை பற்களை பொருத்தி விடுவார். 

sothai pal sariyaga


பல் வலியை போக்குவது எப்படி?

சொத்தைப் பல் குணமாக, கிராம புறங்களில் புகையிலையை பயன்படுத்துவர். ஆனால் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல். 

சரியான பல் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று, வைத்தியம் செய்து கொள்ளலாம். 


வருமுன் காப்போம்: பல் சுத்தம்


வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி கொண்டு பல் துலக்குவதால், பற்கள் தூய்மையாகும். சாப்பிட்ட பிறகு தவறாமல், நன்றாக வாயில் தண்ணீர் நிறைத்து, கொப்பளித்து துப்ப வேண்டும். 

ஒவ்வொரு முறையும் சாப்பாடு, அல்லது நொறுக்குத் தீனி சாப்பிட்ட பிறகு இவ்வாறு செய்வது கட்டாயம். அப்பொழுது உணவுத் துகள்கள் பற்களின் இடையில் சிக்கியிருந்தாலும கொப்பளிக்கும் வேகத்தில் அவைகள் அனைத்தும் வெளியேற்றப்படும். 

நல்ல இயற்கையான பல்பொடி கொண்டு பற்களுடன் ஈறுகளையும் மிதமாக அழுத்தி தேய்த்துக் கொடுப்பதன் மூலம் பற்கள் பலமடையும். 


சொத்தை பல் வலி சரியாக

சொத்தைப் பற்களால் வரும் வலியை தீர்க்கும் மற்றுமொரு வீட்டு நிவாரணமாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இயற்கையான ஆப்பிள் சீடர் வினிகர் ஆச்சரியமான பலன்களைக் கொடுக்கும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். 

சில நிமிடங்களுக்கு உங்களுடைய வாயில் இதனை வைத்திருந்து விட்டு, துப்பி விடவும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தொற்றுகளை நீக்க முடியும். இது சொத்தைப் பல் வலியால் வந்த வீக்கத்தை குறைக்கவும் உதவும்.


நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங்:

தினந்தோறும் காலையில் எழுந்த வுடன் வாயில் 20 மிலி நல்லெண்ணெய் அல்லது சுத்தமான செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணைய் ஊற்றிக்கொண்டு, சுமார் 20 நிமிடம் வரை வாயை மூடி கொப்புளிக்க வேண்டும். 


எண்ணெய் வழவழப்புத் தன்மை மாறி, நீர் போல மாறிடும். அப்பொழுது அதை வெளியில் துப்ப வேண்டும். தினமும் இப்படி செய்து வர பற்கள் மட்டுமல்ல, உடல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். 

வாயின் வழியாகத்தான் பலநுண் கிருமிகள் குடலுக்குள் சென்று மனிதர்களுக்கு நோயை உண்டு பண்ணுகிறது. அந்த கிருமிகளை அழித்து சுத்தமாக வாயை வைத்திருக்கிறது இந்த நல்லெண்ணெய். 

இதனால் நாளடைவில் பற்கள் வெண்மையாக ஜொலிப்பதோடு, கருமையான உதடுகள் பளபளவென "ரோஜா" நிற மாக மாறி நல்ல அழகை கொடுக்கும்.

பல் வலி, பல் ஈறு வீக்கமடைதல்:


சில நேரங்களில் உடல் சூடு, பல் ஈறுகளில் கிருமி தொற்று ஏற்படுதல், அல்லது அடி படுதல் காரணமாக பல் ஈறுகளில் கடினமான வலி ஏற்படும். தாங்க முடியாத வலியால் தவிப்பர். அதுபோன்றவர்கள் இளஞ்சூடா உப்பு நீர் கொண்டு, வாய் கொப்பளித்து, கொப்பளித்து துப்பினால், ஓரளவிற்கு கிருமிகளை அகற்றி, வலியிருந்து தற்காலிக நிவாரணம் பெறலாம். 


 




Post a Comment

0 Comments