உடல் உள்உறுப்புகளை சுத்தப்படுத்த உயர்வான பானம்

உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்க / உடல் உள் உறுப்புகளை சுத்தப்படுத்திட உதவும் குடிநீர் பானம்


health drink to clean liver toxins

உள்ளத்தை சுத்தமாக வைத்திருக்க ஆன்மீகம் மற்றும் நல்ல எண்ணங்கள் உதவுவது போல. நம்முடைய உடலை சுத்தப்படுத்த, அதுவும் உள் உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க மிக எளிதாக வீட்டில் தயாரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுகிறது. சாதாரணமாக நீரை அப்படியே அருந்துவதை காட்டிலும், அதில் குறிப்பிட்ட சில உன்னத பொருட்களை கலந்து குடிப்பதன் மூலம் உடல் உள் உறுப்புகளை மிக அருமையாக சுத்தப்படுதலாம். குறிப்பாக கல்லீரல் சுத்தமாகி, உடலில் நோய்கள் அண்டாமல், சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். 


அன்றாடம் நான் உண்ணும் உணவின் மூலம் சத்துக்கள் சேர்வதோடு, அதில் உள்ள வேண்டாத பொருட்கள் மூலம் நம் உடலில் அழுக்குகள் சேர்ந்து கொண்டு உள்ளது என்பது தான் உண்மை. குறிப்பாக உடலின் ராஜ உறுப்பான கல்லீரலில் அழுக்குகள் அவ்வப்போது சேர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி உடலில் சேரும் அழுக்குகளை (Toxins) வெளியேற்ற சில வழிகள் உள்ளன.

 அவற்றில் சிறந்த அதிகம் செலவில்லாத முறை அதிகமான குடிநீர் எடுத்துக்கொள்கவது. கூடுதலாக அந்த குடி நீரில் உடலை சுத்தப்படுத்தும் சில பொருட்களை சேர்த்துக் குடிப்பது. அது என்னென்ன பொருட்கள்? அவற்றை எப்படியெல்லாம் குடிநீரில் கலந்து குடித்தால் "கல்லீரல்" சுத்தமாகி நல்ல நிலைமை மீண்டும் அடையும் என்று தெரிந்துகொள்ளலாம். 


அந்த குறிப்பிட்ட  பொருட்கள் உடலைச் சுத்தப்படுத்துவதோடு நில்லாமல், உடலின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடல் அதிக ஆரோக்கியத்தை இருக்க உதவுகிறது. 

உடலை சுத்தப்படுத்த குடிநீரில் கலந்து குடிக்க வேண்டிய உணவுப் பொருட்கள்: 


குடிநீரில் எலுமிச்சை சாறு


நாம் குடிக்கும் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து, தினமும் குடித்து வந்தால், உடலில்/குடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவதோடு, செரிமானம் மேம்படும். நோயெதிர்ப்பு மண்டலம் சீரடைந்து வலிமையடையும். குறிப்பாக வாய் துர்நாற்றம் நீங்கும்.  சருமம் அதிக பொலிவாகும் மற்றும் உடல் எடை குறைந்து இளைமை தோற்றம் கிடைக்கும். 


குடிநீரில் இஞ்சி சாறு


சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சியில் அதிக வைட்டமின்கள் உள்ளது. அதில் உள்ள மருத்துவ குணமிக்க சத்துக்கள் உடலில் ஏற்படும் ஜீரண பிரச்னைகள் மற்றும் உணவு மண்டலத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்கிறது. . குடிக்கும் நீரில் சிறிதளவு இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அதன் பிறகு அதில் தேன் கலந்து தினமும் பருகி வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்தோடு ஏற்படும் ஜீரண கோளாறுகள் குறையும்.


குடிநீரில் மஞ்சள் பொடி 


மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் ஏராளமாக உள்ளது. அத்தகைய மஞ்சள் பொடியை குடிக்கும் நீரில் கலந்து குடித்து வந்தால், உடலினுள் உள்ள கிருமிகள் அனைத்தும் அழித்து வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.


குடிநீரில் மிளகு பொடி 


மிளகில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால், அதனை நீரில் போட்டு கொதிக்க விட்டு, தேன் கலந்து குடித்து வர, கல்லீரல், நுரையீரல் போன்றவை சுத்தமாகும். மேலும் மிளகில் கேப்சைசின் இருப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.


க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


சுடுநீரில் க்ரீன் டீ பையை சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேன் கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும் மற்றும் உடல் எடையும் குறையும். அதுமட்டுமின்றி, க்ரீன் டீ எலும்புகளின் ஆரோக்கியம், வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


ஆப்பிள் சீடர் வினிகர் தரும் ஆரோக்கியம்


ஆப்பிள் சாற்றினைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகரில் நொதிகள், கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. மேலும் இது உடலை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்று. அதுமட்டுமின்றி, இது பற்களில் உள்ள கறைகளைப் போக்கி, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே 1 டம்ளர் நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் சுத்தமாகி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Post a Comment

0 Comments