சளி, இருமல், காய்ச்சல் குணமாக நாட்டு மருந்து !

sali irumal kaihcal nattu vaithiyam

 ஆங்கில மருந்துகள் வருவதற்கு முன்பே , நம் முன்னோர்கள் நோய்களுக்கு "நாட்டு மருந்து" கண்டறிந்து, அந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கி வந்துள்ளனர். 

குறிப்பாக சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம் நல்ல கை கண்ட மருந்தாக விளங்கி உள்ளது. அதன் படி சளி, காய்ச்சல், இருமல் நோய்களுக்க உடனடி குணம் கிடைக்க அற்புதமான சூத்திரங்களை அவர்கள் எழுதி வைத்துள்ளனர். 


"உணவே மருந்து" "மருந்தே உணவு" என்பதில் மிக கவனமாக மருத்து அனுபவங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அதனைப் பின்பற்றி வந்த சித்தர் வழி மரபினர்கள் தொடர்ந்து மக்களுக்கு "நாட்டு வைத்தியம்" செய்து குணமாக்கி வந்துள்ளனர். 

அதன் பிறகு வந்த அலோபதி மருந்து, மாத்திரைகள், உடனடி குணம் கொடுக்க, நாட்டு மருந்து, சித்த வைத்தியம், வீட்டு வைத்தியம், பாட்டி வைத்திய முறைகளை கைவிட்டனர். இதனால் உடல் ஆங்கில மருந்துகளுக்கு ஏற்ற வாறு பழகப்பட்டு, அதனால் கிடைக்கும் பின் விளைவுகளையும் ஏற்க , புதிய புதிய நோய்கள் மனிதர்களுக்கு வரத் தொடங்கியது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து, தற்கால சமுதாய சந்த திகள் அனைவரும், நம் முன்னோர்கள் போல அதிக நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாக உள்ளனர். 


சிறிய வயதினர்களுக்கு கூட அபாயகரமான "கே ன்சர்" போன்ற கொடிய வியாதிகள் வந்து அவதிக்கு உள்ளாக்குகின்றனர். நல்ல சத்துமிக்க உணவுகளை விடுத்து, ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சத்துக்களை இழந்த சக்கை உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் உடலுக்கு தேவையான விட்டமின்கள், போஷாக்குகள் கிடைக்காமல் போகிறது. தேவையில்லாமல் உடல் எடை அதிகரிக்கிறது. சோம்பேறித்தனம் அதிகமாகி, உடல் உழைப்பு, உடல்பயிற்சி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். 


சரி. சளி, காய்ச்சல், இருமல் மருந்துக்கும், இதற்கும் என்னதொடர்பு என கேட்பது புரிகிறது. அடிப்படையில் இந்த தவறுகளை மனிதர்கள் தொடர்ந்து செய்து வருவதால்தான் இதுபோன்ற நோய்கள் அடிக்கடி மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்பதை குறிப்பிடத்தான் மேற் சொன்ன விடயங்கள். 

சளி, காய்ச்சல், இருமல் - நாட்டு மருந்து

சளி இருமல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அதிகமான ஓய்வு தேவைப்படும். எனவே அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் வீட்டில் நன்றாக தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். 

வரும் சளியை வெளியேற்றி விட வேண்டும். அதிகமான தண்ணீரை பருகுவதன் மூலம், உடலில் அதிகமான நீர்சத்து வெளியேறி ஏற்படும் தலைவலி மற்றும் உடல் சோர்வை போக்க முடியும். 

தண்ணீரை சுட வைத்து, வெது வெதுப்பாக இருக்கும் தருணத்தில் சிறிது சிறிதாக தண்ணீரை பருக, உடலில் உள்ள சளி வெளியேறிவிடும். 

வெந்நீரில் குளியல்: வெந்நீரில் இதமான குளியல் எடுக்கும்பொழுது உடல் சோர்வு, உடல் வலி நீங்கி நல்ல புத்துணர்வு  பெறலாம். 

காலை உணவு: 

காலை உணவாக அதிகமான காரம் சேர்ந்த உணவுகளை தவிர்ப்பது நலம். மிக எளிதாக ஜீரணக்க கூடிய அரசி கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். 




Post a Comment

0 Comments