முதுகு தண்டு வலி நீங்க

முதுகு தண்டு வலி யை தான் முதுகு வலி என்று பொதுவாக குறிப்பிடுகிறோம். முதுகில் கீழ் முதுகு, மேல் முதுகு என இரண்டு பிரிவாக பிரித்து, எங்கு வலி இருக்கிறது என மருத்துவர்கள் கேட்பர். பெரும்பாலும் கீழ் முதுகு வலியால்தான் அதிகம் நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக காரணம் அதிக நேரம் உட்கார்ந்து பணி புரிதல், சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் அதிக எடை தூக்குதல், அதிகமான நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். முதுகு தண்டு வலி நீங்க என்ன செய்யலாம்? என்ன செய்தால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


முதுகு தண்டு வலி நீங்க இயற்கை முறை


தரையில் மல்லாந்து படுத்து கால்கள் இரண்டையும் மடக்கி வைக்கவும். கைகளை இலேசாக பரப்பு உள்ளங்கைகள் இரண்டும் தரையை பார்க்குமாறு கவிழ்த்து வைத்துக்கொள்ளவும். பிறகு மடக்கி வைத்த கால்களின் பாதங்களை நன்றாக தரையில் ஊன்றிக்கொண்டு இலேசாக இடுப்பை உயர்த்தவும். பிறகு கீழிறக்கி சமதளத்தில் முதுகு தண்டு படுமாறு  வைக்கும். ஒருசில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். இந்த முறை முடிந்தளவுக்கு உயர்த்திப் பார்க்கவும். பிறகு கீழிறக்கு தரையில் படுமாறு முதுகை வைக்கவும்.

இவ்வாறு 20 முறை செய்யவும். பிறகு ஒரு 5 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 20 முறை செய்யவும். இது போல மூன்று முறை ஒரு நாளைக்கு செய்து முடிக்கவும். இந்த பயிற்சியை நேரம் இருக்கும்போதெல்லாம் செய்யலாம். எப்பொழுதெல்லாம் முதுகு தண்டுவட வலி தோன்றுகிறதோ, அப்பொழுதுதெல்லாம் மல்லாக்கப்படுத்து இதை செய்து வரலாம்.

முதுகு தண்டு வலிநீங்க இயற்கை மருத்துவம்


இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எத்தனையோ உள்ளது. அது மருத்துவத்திற்குப் பயன்படும் இயற்கை மூலிகைள் உம் ஒன்று.

விளக்கெண்ணெய்

பாதிக்கப்பட்ட இடத்தில் விளக்கெண்ணையை இலேசாக சூடுபடுத்தி தடவி வர முதுகு வலி நீங்கும்.

ஆயுர்வேத மருத்துவம்:

முதுகு தண்டுவடத்தில் Disc bulging, Disc Prolapse , தேய்மானம், disc compression in nerve root போன்ற வலி உபாதைகள் உள்ளன. அவற்றிற்கு ஆயுர்வத த்தில் பல்வேறு வைத்திய முறைகள் உள்ளன். .

1. முதலில் நல்ல ஓய்வு கொடுத்திட வேண்டும்.
2. கம்பளி போன்ற உஷ்ணப் பாங்கான விரிப்பு கொண்ட படுக்கையில் முதுகு படும்ப்படி மல்லாந்து படுத்தி, கால்களை சவுகரியமாக  நீட்டி படுத்திருப்பது நல்லது.
3. முதுகு தண்டு வடத்தில் வலி வருவதற்கு காரணம் தசைகள் விரைத்திருப்பதுதான். அந்த தசைகளை இயக்கிடும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தால் முதுகு தண்டு வட வலி வரும்.

muthugu thanduvada vali neenga vaithiyam


முதுகு தண்டுவலி போக - தத்தூராதி தைலம் 


இது ஒரு மிக எளிய முறை. கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதை உரலில் அல்லது மிக்சியில் இட்டு 200 மி.லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 20 மி.லி  நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, அந்தக் கலவை முழுவதும் சுண்டிக் கசடாகும் வரையில் காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

கைசூடு பொறுக்கும் வரை காத்திருந்து அதில் கட்டிச்சூடம் 10 கிராம் தூளாக்கிப் போட்டு கலக்கிவிடவும்.

இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவி அதன் மீது கோதுமை தவிட்டை வறுத்து, துணியில் கட்டி, இதமான சூட்டில் வலி உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வை மற்றும் எண்ணெய் பிசுக்கை நல்லதொரு துணி கொண்டு துடைத்தெடுக்கவும். அதன் பிறகு மீந்திருக்கும் ஊமத்தை தைலத்தை இலேசாக மெல்லிய பூச்சாக வலி கண்ட இடத்தில் தடவிவிட வேண்டும். ஒரு சிலருக்கு இந்த தைலத்தை தடவம்பொழுது குமட்டல் வரும். அப்படி வந்தால் இந்த வைத்தியத்தை செய்ய வேண்டாம்.

முதுகு வலி போக்கும் - சசிஸார தைலம்



செய்முறை: 


ஓமம் 400 கிராம் எடுத்து. அதில் முன்பு கூறிய எண்ணைய் சேர்த்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த கலவை நான்கில் ஒரு பங்கு ஆகும் வரை காய்ச்ச வேண்டும். 1 லிட்டர் அளவுக்கு சுண்டியவுடன், அதில் கற்பூரம் போட்டு கலக்கி மிதமான சூடு வரும் வரைக்கும் பொறுத்திருந்து, அந்த தைலத்தை பாதிக்கப்பட்ட முதுகு தண்டு வடத்தில் பூசவும்.
முன்பு குறிப்பிட்ட "த த்துராதி தைலம்" ஒத்து வராதவர்களுக்கு இந்த தைலம் பலன் கொடுக்கும்.


#முதுகுவலி #முதுகுதண்டுவடம் #இயற்கை மருந்து #தமிழ்வைத்தியம்





Post a Comment

0 Comments